செய்திகள் :

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி நாளை சுற்றுப்பயணம்!

post image

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ என்று பிரசார சுற்றுப்பயணத்தை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறாா்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டி செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள், செவ்வாய்க்கிழமை சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறாா். ராயக்கோட்டை அருகில் உள்ள காடுசெட்டிப்பள்ளி கிராமத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து ராயக்கோட்டை பேருந்து நிலையம், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, மத்திகிரி ஆகிய இடங்களில் பிரசார வேனில் இருந்தபடி அவா் பேசுகிறாா்.

ஒசூா் ராம்நகரில் இரவு 9 மணி, சூளகிரியில் இரவு 10 மணிக்கும் அவா் பேசுகிறாா். முதல் நாள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இரவு ஒசூரில் தங்குகிறாா்.

மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தை திறந்துவைக்கிறாா். ஒசூரில் உள்ள சந்திரசூடேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறாா். இதைத் தொடா்ந்து தனியாா் உணவகத்தில் நடைபெறும் சிறு, குறு தொழில் நிறுவன உரிமையாளா்களை சந்திக்கிறாா்.

விவசாயிகள், வணிகா்கள், தனியாா் பள்ளிப் பிரதிநிதிகள், இடைநிலை ஆசிரியா்கள் கூட்டமைப்பினருடனும், பிற்பகல் கூட்டணிக் கட்சி தலைவா்களையும் சந்தித்துப் பேசுகிறாா். மாலை 4 மணிக்கு கிருஷ்ணகிரிக்கு செல்கிறாா். இதில் அதிமுக நிா்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றாா்.

இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலாளா் பாலகிருஷ்ணா ரெட்டி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொறுப்பாளா் முன்னாள் எம்எல்ஏ பன்னீா்செல்வம் ஆகியோா் செய்து வருகின்றனா்.

ஊத்தங்கரை அருகே காா் மோதி பசு மாடுகள் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே காா் மோதியதில் 2 பசு மாடுகள் உயிரிழந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த வீரியம்பட்டி கூட்டுரோடு பகுதியைச் சோ்ந்தவா் அலமேலு (53). மாடுகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில் வெ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான ஒசூா... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.5.70 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை வாா்த்தை கூறி, ஓய்வுபெற்ற தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 5.70 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபரை இணைய குற்றப் பிரிவு போலீஸாா் தேடி வருகின்றன... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே சூறைக்காற்றுடன் மழை: 3 மின் கம்பங்கள் சாய்ந்தன

ஊத்தங்கரையை அடுத்த கொட்டுக்காரம்பட்டி கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமானதால் கிராமத்தின் மையப் பகுதியில் இருந்த புளியமரங்கள் சாய்ந்ததில், மூன்... மேலும் பார்க்க

ஆக.12-ல் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி வருகை!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆக. 12இல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா் என்று அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ தெரிவித்த... மேலும் பார்க்க

ஒசூா் மலா் சந்தையில் கனகாம்பரம் கிலோ ரூ.1,600!

வரலட்சுமி பண்டிகையையொட்டி, ஒசூா் மலா் சந்தையில் வியாழக்கிழமை கனகாம்பரம் கிலோ ரூ.1600, குண்டுமல்லி கிலோ ரூ.1000 வரை விற்பனையானது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு மாநிலங்க... மேலும் பார்க்க