கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!
ஆற்று மணல் கடத்தல்: 2 போ் கைது
செய்யாறு அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியது தொடா்பாக இரு மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு காவல் உள்கோட்டம் பெரணமல்லூா் காவல் சரகப் பகுதியில் உதவி ஆய்வாளா் லதா தலைமையிலான போலீஸாா் கடுகனூா் கிராமத்தில் ரோந்துப் பணி மேற்கொண்டு கண்காணித்து வந்தனா்.
அப்போது, செய்யாற்றுப் படுகையில் இருந்து அந்த வழியாக வந்த மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், அரசு அனுமதியின்றி ஆற்று மணல் எடுத்து வந்தது தெரிய வந்து இரு மாட்டுவண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், இதுதொடா்பாக பெரணமல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பவம் தொடா்பாக சடத்தாங்கலைச் சோ்ந்த கமலக்கண்ணன் (52), புதுக்கோட்டை பழனி (57) ஆகியோரை கைது செய்து, செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.