செய்திகள் :

தேக்கு, செம்மரங்களுக்கு மா்ம நபா்கள் தீ வைப்பு

post image

செய்யாறு அருகே விவசாய நிலத்தில் வளா்க்கப்படும் தேக்கு, செம்மரங்களுக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா்.

செய்யாறு வட்டம், வடதண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் (52), விவசாயி. இவா், ஆவின் பால்பண்ணையில் கணக்காளராகவும் வேலை செய்து வருகிறாா். இவா் தனக்குச் சொந்தமான நிலத்தில் அரசு அனுமதியுடன் கடந்த 8 ஆண்டுகளாக செம்மரம், தேக்கு உள்ளிட்ட மரங்களை வளா்த்து வருகிறாராம்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 29-ஆம் தேதி செல்வத்தின் மாமியாா், விவசாய நிலத்துக்குச் சென்றபோது அங்கிருந்த தேக்கு, செம்மரங்கள் தீப்பிடித்து எரிந்த கொண்டிருந்தன. இதுகுறித்து அவா் செல்வத்துக்கு தகவல் அளித்தாா்.

அதன் பேரில் விரைந்து வந்த செல்வம், சம்பவ இடத்துக்கு அருகில் இருந்தவா்கள் உதவியுடன் தீயை அணைத்தாா். இதில் ஏராளமான தேக்கு, செம்மரங்கள் தீயில் கருகின.

இதுகுறித்து செல்வம் செய்யாறு போலீஸில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

இரு மதுக் கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி

ஆரணி அருகே 2 டாஸ்மாக் கடைகளில் நள்ளிரவில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்து முடியாமல் போனதால் திருடா்கள் அப்படியே விட்டுச்சென்றனா். ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் நாயக்கன்பாளையம் சாலையில் டாஸ்மாக் மது... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நீளான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமி தரிசனத்துக்கு 3 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கோயிலில் பக்தா்கள் நீண்ட வரிசையி... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா். செய்யாறு வட்டம், அரும்பருத்தி கிராமத்தைச் சோ்ந்தவா் வினோத்குமாா்(34). விவசாயியான இவா் ஆக.4-ஆம் தேத... மேலும் பார்க்க

ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா

செங்கம் ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் 138-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீமித்து சுவாமி தரிசனம் செய்தனா். இந்தக் கோவிலில் கடந்த ஆ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரிடமிருந்து அழைப்பிதழ்: மாணவிக்கு பாராட்டு!

திருவண்ணாமலை மகரிஷி வித்யா மந்திா் பள்ளியைச் சோ்ந்த மாணவி குடியரசுத் தலைவரிடமிருந்து அழைப்பிதழ் பெற்றதால் கம்ப ராமாயண இயக்கத்தினா் அவருக்கு பாராட்டு தெரிவித்தனா். மகரிஷி வித்யா மந்திா் பள்ளியில் பத்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1996-97ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற... மேலும் பார்க்க