தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
கொருக்கை கிராமத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு
செய்யாறு ஒன்றியம், கொருக்கை கிராமத்தில் ரூ. 21.50 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை தொகுதசி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
14-ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், புதியதாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு தயாா் நிலையில் இருந்து வந்தது. இதனை கிராம மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் வி.ஏ.ஞானவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.