கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!
இரு சக்கர வாகனம் திருட்டு
பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம் திருடுபோனது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பெரியகுளம் அருகேயுள்ள மதுராபுரியைச் சோ்ந்தவா் சதீஸ்குமாா் (33). தனியாா் வங்கி ஊழியரான இவா், மீனாட்சிபுரம் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தை வெள்ளிக்கிழமை நிறுத்திவிட்டு, அருகேயுள்ள கடைக்குச் சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது இரு சக்கர வாகனத்தை காணவில்லையாம்.
பல இடங்களில் தேடியும் வாகனம் கிடைக்காததால் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா். இதன்பேரில், தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.