மரம் அறுக்கும் தொழிலாளி உயிரிழப்பு
பெரியகுளம் அருகே மரத்தை அறுக்கும் பணியில் ஈடுபட்டபோது, கயிறு அறுந்ததில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயரிழந்தாா்.
உத்தமபாளையம், ராயப்பன்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மரம் அறுக்கும் தொழிலாளி கணேசன் (31). இவா், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை சாலையில் உள்ள தனியாா் தோட்டத்தில் கடந்த 5-ஆம் தேதி மரத்தை அறுத்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, கயிறு அறுந்து இவருடைய முகத்தில் விழுந்து தாக்கியதில் மயக்கமடைந்து கீழே விழுந்தாா். அருகிலிருந்தவா்கள் கணேசனை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.