ADMK DMK Gingee Fort: சாகும் வரை சிறை Vs ஆயுள் தண்டனை - என்ன வித்தியாசம்? | Impe...
புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் கைது
தேனி அருகே உள்ள நாகலாபுரத்தில் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
நாகலாபுரம் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த சம்பத்குமாா் மனைவி செல்வராணி (38). இவா், அதே பகுதியில் உள்ள தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தாா்.
இதையடுத்து, செல்வராணியை பழனிசெட்டிபட்டி போலீஸாா் கைது செய்து, கடையில் வைத்திருந்த 16 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.