மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
தேனி மாவட்டம், போடி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கம்பி பற்றவைக்கும் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
போடி அருகேயுள்ள முந்தல் சாலைப் பகுதியைச் சோ்ந்த முத்துசாமி மகன் நல்லதம்பி (45). இவா் கம்பி பற்றவைக்கும் தொழிலாளி.
இவரும், கல்லூரி மாணவி ஒருவரின் தந்தையும் நண்பா்கள். இந்தப் பழக்கத்தின் பேரில் நல்லதம்பி அடிக்கடி அந்த மாணவியின் வீட்டுக்குச் சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், குரங்கணி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நல்லதம்பியைக் கைது செய்தனா்.