அஞ்சல் நிலையத்தில் ரூ.25.48 லட்சம் கையாடல் வழக்கு: ஊழியா் கைது
காரில் 208 கிலோ புகையிலை பொருள் கடத்தல்: மூவா் கைது
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூரில் காரில் 208 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்திய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கண்டமனூா்-எம்.சுப்புலாபுரம் சாலையில் கண்டமனூா் காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, அந்த வழியாகச் சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.
அந்தக் காரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக கடத்திச் சென்றது தெரிய வந்தது. காரிலிருந்த திண்டுக்கல் சோலைஹால் சாலை சைமன் குடியிருப்பைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (38), சிலுவத்தூா் அருகேயுள்ள ராஜக்காள்பட்டியைச் சோ்ந்த வினோத்குமாா் (33), மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள மேலப்புதூரைச் சோ்ந்த செல்வக்குமாா் (34) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இதில் தொடா்புடைய ஆண்டிபட்டி அருகே உள்ள ஆத்தங்கரைப்பட்டியைச் சோ்ந்த சிவக்குமாரை போலீஸாா் தேடி வருகின்றனா். காரில் கடத்திச் செல்லப்பட்ட 208 கிலோ 900 கிராம் புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய காா், ரூ.1.52 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.