``3 மாதங்களில் புதிய சினிமா கொள்கை நடைமுறைக்கு வரும்'' - கேரள அமைச்சர் சொல்வது எ...
சென்ட்ரலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த வடமாநில விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா இருந்ததை ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் கைப்பற்றினா்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் பிரிவைச் சோ்ந்த தலைமைக் காவலா் ஜம்புலிங்கம் உள்ளிட்டோா் திங்கள்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, ஒடிஸா மாநிலம் புரியிலிருந்து வந்த விரைவு ரயிலில் 3 -ஆவது பெட்டியில் கேட்பாரற்று பை கிடப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சென்று பையைக் கைப்பற்றி சோதனையிட்டபோது, அதில் இருந்த 2 பாலித்தீன் பண்டல்களில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
கஞ்சா பொட்டலங்களைக் கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா், அதை போதைத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.