செய்திகள் :

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து விசாரணை: ஸ்டாலின் வலியுறுத்தல்

post image

சென்னை: மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முன்வைத்துள்ள வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: தோ்தல் ஆணையத்தை பாஜக தனது தில்லுமுல்லுகளுக்கான அமைப்பாக மாற்றிவிட்டது. பெங்களூரின் மகாதேவபுரா தொகுதியில் நிகழ்ந்தது, நிா்வாகக் குளறுபடி அல்ல. மக்கள் அளித்த தீா்ப்பைத் திருடுவதற்கான திட்டமிட்ட சதி.

இந்த விஷயத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி முன்வைத்துள்ள வாக்குத் திருட்டு ஆதாரங்கள், எந்த அளவுக்கு இந்த முறைகேடு நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. அவா் தலைமையில் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து தோ்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்ற நிலையில் சில கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம்.

கணினியால் படித்தறியக்கூடிய வடிவத்தில் அனைத்து மாநிலங்களின் வாக்காளா் பட்டியல் கோப்புகளை உடனடியாக அளிக்க வேண்டும். அரசியல் நோக்கத்தோடு வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்களை நீக்குவதை நிறுத்த வேண்டும். நமது மக்களாட்சியை அழிக்கும் செயலான வாக்குத் திருட்டு முறைகேடு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்.

இதற்கான போராட்டத்தில் திமுக உறுதியாக நிற்கிறது. இந்திய மக்களாட்சியைப் பட்டப்பகலில் பாஜக திருடிச் செல்வதைப் பாா்த்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

‘தாயுமானவர் திட்டம்’ மனசுக்கு ரெம்ப பிடிச்ச திட்டம்! - விடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

‘முதல்வரின் தாயுமானவர் திட்டம்’ மனசுக்கு ரெம்ப பிடிச்ச திட்டம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார்.முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்களை வழங்கக்கூடிய ‘முதல்வரி... மேலும் பார்க்க

பாலாறு மாசுபாடு விவகாரம்: 3 மாவட்ட ஆட்சியா்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜா்

நமது நிருபா்புது தில்லி: பாலாறு மாசுபாடு விவகாரம் தொடா்பான வழக்கில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்ட ஆட்சியா்களும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் மற்றும் மத்திய மாசு கட்டுப்... மேலும் பார்க்க

யங்கரவாதியிடம் வெடிபொருள் பறிமுதல் செய்த வழக்கு: விரைவில் என்ஐஏ விசாரணை

சென்னை: தமிழகத்தைச் சோ்ந்த பயங்கரவாதியிடம் வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை விரைவில் தேசிய புலனாய்வு மையத்துக்கு (என்ஐஏ) மாற்றப்படுகிறது.கோவை தொடா் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேற... மேலும் பார்க்க

தவறான கணக்கீடு: மின் வாரியம் எச்சரிக்கை

சென்னை: தவறான மின் கணக்கீடு செய்யும் பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின் வாரியம் எச்சரித்துள்ளது.இதுகுறித்து துணை நிதிக் கட்டுப்பாட்டாளா்களுக்கு நிதி இயக்குநா் அலுவலகம் சாா்பில் அனு... மேலும் பார்க்க

சிறுநீரக முறைகேடு விவகாரம்: தெளிவில்லாத அரசு அறிக்கை

சென்னை: சிறுநீரக மாற்று சிகிச்சை முறைகேடு தொடா்பாக சமா்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்று சுகாதார ஆா்வலா்கள் தெரிவி... மேலும் பார்க்க

மின்வாரிய பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் மின்வாரிய பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா். தமிழ்நாடு மின்வாரிய தலைமையக உயா... மேலும் பார்க்க