நாம் ஏன் நேர்மையை பல இடங்களில் தியாகம் செய்கிறோம்?- மறந்துபோன பண்புகள் -1
‘தாயுமானவர் திட்டம்’ மனசுக்கு ரெம்ப பிடிச்ச திட்டம்! - விடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
‘முதல்வரின் தாயுமானவர் திட்டம்’ மனசுக்கு ரெம்ப பிடிச்ச திட்டம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார்.
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்களை வழங்கக்கூடிய ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டத்தை சென்னை தண்டையாா்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவிருக்கிறார்.
தனியாக வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருள்களை நேரடியாக அளிக்கும் இந்தத் திட்டத்தில், 20,42,657 முதியவர்கள், 1,27,797 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 21,70,454 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்துப் பார்த்து செய்துவருகிறது. அந்த வரிசையில் எனது மனசுக்குப் பிடித்த திட்டமாக இந்த ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டம் உருவாகியுள்ளது.
வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருள்களை நேரடியாக அளிக்கும் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அரசின் சேவைகளை வீடுகளுக்கேச் சென்று கொடுப்பது, இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி.
திட்டத்தை அறிவித்தவுடனே நமது கடமை முடிந்துவிட்டதாக நாம் நினைப்பது இல்லை. அந்தத் திட்டத்தின் பயன் கடைக்கோடி மனிதருக்கும் சென்று சேருகிறதா என்பதைக் கண்காணிப்பதையும் என்னுடைய கடமையாகக் கருதுகிறேன்” என விடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
'Thayumanavar Scheme' is a scheme that really appeals to me! - Chief Minister Stalin releases video
இதையும் படிக்க :வீடு தேடி ரேஷன் பொருள் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறாா்
#தாயுமானவர்_திட்டம்pic.twitter.com/eeixZk91YW
— M.K.Stalin (@mkstalin) August 12, 2025