செய்திகள் :

``ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை'' - மோடி - ஜெலன்ஸ்கி தொலைபேசி பேச்சு; உக்ரைன் வைத்த கோரிக்கை

post image

2022-ம் ஆண்டு ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியது. இதை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் எவ்வளவு முயற்சி செய்தும் இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதையொட்டி, வரும் 15-ம் தேதி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினை அலஸ்காவில் சந்தித்து பேச இருக்கிறார். ஏற்கெனவே, ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, பல நாடுகள் ரஷ்யாவின் மீது வரிகளைக் குவித்துள்ளது.

அமெரிக்காவும் ரஷ்யாவை பயமுறுத்த, ரஷ்யா உடன் வணிகம் செய்யும் நாடுகளின் மீது அதிக வரிகளை விதித்துள்ளது. இதில் இந்தியாவும் அடங்கும்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மோடியின் பதிவு

இந்த நிலையில், நேற்று இந்திய பிரதமர் மோடி மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் பேசியுள்ளனர். இதுகுறித்து மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பேசியதில் மகிழ்ச்சி. போரின் சமீபத்திய நிலையைக் குறித்து அவரிடம் கேட்டறிந்தேன்.

இந்தப் போர் விரைவாகவும், அமைதியாகவும் முடிய வேண்டும் என்கிற இந்தியாவின் நீண்ட நாள் நிலைபாடு குறித்து அவருக்கு தெரியப்படுத்தினேன்.

இதற்கு தேவையான அனைத்து விஷயங்களை செய்யவும் மற்றும் உக்ரைன் உடனான இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தவும் இந்தியா தயார்". என்று தெரிவித்துள்ளார்.

ஜெலன்ஸ்கி என்ன சொல்கிறார்?

இந்தத் தொலைபேசி அழைப்பு குறித்து ஜெலன்ஸ்கி, "இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடன் நீண்ட நேரம் உரையாடினேன்.

இரு நாட்டு உறவுகள் குறித்த முக்கிய விஷயங்களை விவாதித்தோம். நம் மக்களுக்கு ஆதரவாக பேசிய பிரதமரின் வார்த்தைகளுக்கு நன்றி.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

ரஷ்யாவின் தாக்குதல்

நான் அவரிடம் நமது நகரங்கள் மற்றும் கிராமங்களின் மீதான ரஷ்யாவின் தாக்குதல் குறித்து தெரிவித்தேன்.

நேற்று சபோரிஜியாவில் உள்ள பேருந்து நிலையத்தில் நடந்த தாக்குதல் குறித்தும், அங்கே எங்களது கட்டமைப்புகளை அழிக்க ரஷ்யா செய்த குறிவைத்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தது குறித்தும் கூறினேன்.

மேலும், இது தான் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறு இருக்கும் நேரம் என்றும் தெரிவித்தேன்.

இந்தியாவின் ஆதரவு

போர் நிறுத்தம் செய்வதற்கான ஆவலைக் காட்டாமல், ரஷ்யா இன்னும் தனது தாக்குதலைத் தொடர்வதற்கான ஆவலைத் தான் காட்டி வருகிறது.

இந்தியா நமது அமைதிக்கான முயற்சிகளுக்கும், உக்ரைன் சம்பந்தப்பட்ட அனைத்தும் உக்ரைன் இருக்கும்போது தான் விவாதிக்கப்பட வேண்டும் என்பதற்கும் ஆதரவளிக்கிறது.

ரஷ்ய எண்ணெய் இறக்குமதி

நாங்கள் ரஷ்யாவிற்கு எதிரான தடைகள் குறித்தும் விரிவாக பேசினோம்.

இந்தப் போரின் தொடர்ச்சிக்கு நிதியளிக்கும் திறனை குறைக்க, ரஷ்ய எரிசக்தியை, குறிப்பாக எண்ணெயை ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்பதைக் குறிப்பிட்டேன்.

ரஷ்யா உடன் உறுதியான உறவு கொண்ட அனைத்து தலைவர்களும் இது தொடர்பான சமிக்ஞைகளை மாஸ்கோவிற்கு அனுப்ப வேண்டும்.

செப்டம்பர் மாதம் ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தின் போது ஒரு தனிப்பட்ட சந்திப்பைத் திட்டமிட நாங்கள் ஒப்புக்கொண்டோம்" என்று ஜெலன்ஸ்கி தெரிவித்தார். 

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

ECI : Deputy CM-க்கு 2 Voter ID; 3 லட்சம் பேரின் முகவரி `0' -Digital List Deleted?|Imperfect Show

* விரைவுப் பட்டியலிலிருந்து நீக்கியவர்கள் விவரங்களை வெளியிட முடியாது! - உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் * ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்? * தேர்தல் முறைகேடு - எதிர்க்கட்சிகள் பே... மேலும் பார்க்க

Rahul போட்ட வெடி, BJP ஷாக், Stalin உதவியை நாடும் Ramadoss? | Elangovan Explains

'வாக்கு திருட்டு' விஷயத்தை கையில் எடுத்து ராகுல் நடத்திய பேரணி,பாஜக-வுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அடுத்த கட்ட நகர்வு, இன்னும் அதிரடியாக இருக்கும் என்கிறார்கள். இன்னொரு பக்கம் ராமதாஸ் Vs அன்புமணி போரில் ம... மேலும் பார்க்க

``புதின் சந்திப்பு வெற்றி பெறுமா என்பது ஆரம்ப 2 நிமிடங்களில் தெரிந்துவிடும்'' -ட்ரம்ப் சொல்வது என்ன?

வரும் 15-ம் தேதி, அமெரிக்காவின் அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு நடக்க உள்ளது. ட்ரம்ப் திட்டம்இது குறித்து, நேற்று, வெள்ளை மாளிகையில் பேட்டியளித்த ட்ரம்ப், "ரஷ்யா உக்... மேலும் பார்க்க

``Non-stick பாத்திரங்களில் சமைத்தால் ரத்தக்கொதிப்பு, நீரிழிவு'' - நியூயார்க் ஆய்வறிக்கை சொல்வதென்ன?

விதவிதமாக இனிப்பு சாப்பிடுவது மட்டும்தான் நீரிழிவு நோய்க்கு முக்கியமானக் காரணம் என்று நம்பிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான். நீரிழிவு நோய்க்கு, உடலில் இன்சுலின் எ... மேலும் பார்க்க

Doctor Vikatan: கனவுகளே இல்லாத தூக்கம் வரமா, சாபமா?

Doctor Vikatan: சிலருக்கு தூக்கத்தில் அடிக்கடி கனவுகள் வருகின்றன. சிலரோ, கனவுகளே இல்லாமல் தூங்குவதாகச்சொல்கிறார்கள். உண்மையில், கனவுகள் இல்லாத தூக்கம் என்பது வரமா, சாபமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சே... மேலும் பார்க்க

Longevity: நீண்ட நாள்கள் ஆரோக்கியமாக வாழ இவைதான் வழிகள்!

சராசரியாக 30 வயதிலிருந்தே உடல், முதிர்ச்சியை நோக்கியப் பயணத்தைத் தொடங்கிவிடும். ஆனால், சிறிது சிறிதாகவே நிகழ்வதால் அந்த மாற்றத்தின் விளைவை நாம் உணரக் குறைந்தது 10 வருடங்கள் ஆகும். 40 வயதைக் கடந்த பிறக... மேலும் பார்க்க