அமெரிக்காவில் நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய பயணிகள் விமானம்!
``புதின் சந்திப்பு வெற்றி பெறுமா என்பது ஆரம்ப 2 நிமிடங்களில் தெரிந்துவிடும்'' -ட்ரம்ப் சொல்வது என்ன?
வரும் 15-ம் தேதி, அமெரிக்காவின் அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு நடக்க உள்ளது.
ட்ரம்ப் திட்டம்
இது குறித்து, நேற்று, வெள்ளை மாளிகையில் பேட்டியளித்த ட்ரம்ப், "ரஷ்யா உக்ரைனின் பெரியளவிலான பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. அவர்கள் முக்கியமான பகுதிகளையும் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
அதனால், இதில் சில பகுதிகளை உக்ரைனுக்கே திரும்பி தருவதற்கான முயற்சிகளைச் செய்ய போகிறோம்.

அதிபர் புதின் உடன் நடக்க உள்ள சந்திப்பில் இந்தப் போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுப்பேன்.
இந்த சந்திப்பின் ஆரம்ப இரண்டு நிமிடங்களிலேயே, உரையாடல் வெற்றி பெறுமா, இல்லையா என்பது தெரிந்துவிடும்.
அடுத்ததாக, நான், ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகிய மூவரும் ஒன்றாக சந்திக்க உள்ள திட்டமும் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
கிரீமியா என்கிற மாகாணத்திற்காக தொடங்கியது தான் ரஷ்யா - உக்ரைன் போர்.
அப்படியிருக்கையில், ட்ரம்ப் கூறுவதுப்போல, மாகாண மாற்றங்கள் நடக்குமா என்பது பெரும் கேள்விக்குறி தான்.
அடுத்ததாக, இதுவரை, இந்தப் போரை நிறுத்துவதற்கான எந்த ஆவலையும் புதின் காட்டியதே இல்லை.
இந்த நிலையில், ட்ரம்பின் முயற்சி கைக்கொடுக்குமா என்பது இன்னும் மூன்று நாள்களில் தெரிந்துவிடும்.