செய்திகள் :

Urvashi: " `கை வச்சாலும் வைக்காம போனாலும்' பாடலில் நடந்த சுவாரஸ்யமான விஷயம்" - ஊர்வசி ஷேரிங்ஸ்

post image

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஊர்வசி.

நகைச்சுவை தொடங்கி அத்தனை கதாபாத்திரங்களையும் இயல்பாகச் செய்யும் அவருக்கு 'உள்ளொழுக்கு' திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 ஊர்வசி
ஊர்வசி

ஊர்வசி, சமீபத்தில் தொகுப்பாளர் கோபிநாத்தின் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில், நடிகர் கமல்ஹாசனுடன் நடித்த அனுபவங்களையும், 'மைக்கேல் மதன காம ராஜன்' திரைப்படத்தின் புகழ்பெற்ற 'கை வச்சாலும் வைக்காம போனாலும்' பாடலின்போது நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம் குறித்தும் பகிர்ந்திருக்கிறார்.

ஊர்வசி பேசுகையில், " 'கை வச்சாலும் வைக்காம போனாலும்' பாடலில் கமல்ஹாசன் என்னுடைய பாட்டியாக நடித்தவரின் காலில் மட்டும் விழ வேண்டும்.

ஆனால் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், கமல்ஹாசன் நேரடியாக வந்து என் காலிலும் விழுந்துவிட்டார்.

அந்தச் சமயத்தில் நான் திடீரென்று ஆச்சரியப்பட்டு, அதே உணர்வோடு துள்ளிவிடுவேன்.

இது முன்கூட்டியே யாரும் திட்டமிடாத ஒரு இயல்பான தருணம்" எனச் சிரித்துக்கொண்டே கூறினார்.

Kamal Haasan - Urvashi
Kamal Haasan - Urvashi

மேலும் பேசிய அவர், "அவர் என்னை திறமையான நடிகை என்று பலமுறை கூறியுள்ளார்.

அந்த வார்த்தைகள் எனக்கு மிக உற்சாகமாக இருந்தன. இன்று வரை சினிமாவில் பெரிய கதாநாயகியாகப் பயணம் செய்வதற்கு அந்தப் பாராட்டுதலே காரணம்.

அவர் எப்போதும் திறமைகளை அடையாளம் கண்டு பாராட்டும் நல்ல மனம் கொண்ட கலைஞர்.

அவரது அன்பும் பாராட்டும் என்னைத் தொடர்ந்து முன்னேறச் செய்தன." என்று அவர் உணர்ச்சியுடன் தெரிவித்தார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Coolie: ரஜினியின் 'கூலி' படத்தைப் பார்க்க விடுப்பு; செலவுக்கு ரூ.2,000 கொடுத்த சிங்கப்பூர் நிறுவனம்!

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'கூலி' திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி திரைக்குவருகிறது. நாகார்ஜுனா, ஆமீர் கான், உபேந்திரா, சோபின், சத்யராஜ், சுருதி ஹாசன் உள்ளிட்ட பலர... மேலும் பார்க்க

100-வது படம்; `மிஸ்ஸான’ விஜய் - `மெகா ஹிட்’ ஃபார்முலாவை கையிலெடுக்கும் சூப்பர் குட் பிலிம்ஸ்!

இன்றைக்கு தமிழ் சினிமா இருக்கும் நிலையில், ஒரு படத்தை தயாரிப்பதே பெரிய சாதனையாக இருக்கிறது என்கிறார்கள் பல தயாரிப்பாளர்கள். அந்தப் படத்தை எந்த சிக்கலும் இல்லாமல் ரிலீஸ் செய்வது அதைவிட அசுர சாதனை. திரை... மேலும் பார்க்க

Coolie: "நாம் ஒன்றாகப் பயணித்த நீண்ட பயணம் இது" - எடிட்டர் பிலோமின் ராஜ் குறித்து லோகேஷ் நெகிழ்ச்சி

ரஜினி காந்த் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் எடிட்டரான ப... மேலும் பார்க்க

Maareesan: "அத்தருணத்தில் தான் ஒரு அற்புதமான நடிகர் என்பதைக் காட்டினார்" - வடிவேலு குறித்து ஷங்கர்

சுதீஷ் சங்கர் இயக்கத்தில், வடிவேலு, பஹத் ஃபாசில் நடிப்பில் கடந்த ஜூலை 25ம் தேதி வெளியான திரைப்படம் 'மாரீசன்'. ஆர்.பி. சவுத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தது. யுவன் சங்கர் ... மேலும் பார்க்க

Jana Nayagan:``அவ்வளவு பெரிய நட்சத்திரமாகக் கொண்டாடப்படுகிறார்" - விஜய் குறித்து நடிகர் பாபி தியோல்

ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஜனநாயகன்’. அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி,... மேலும் பார்க்க