Pension Scheme: "பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வருமா?" - நிர்மலா சீத...
Stray Dogs: "நாய்களைப் பாதிக்கும்; ஒரே வழி..." - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பீட்டா அமைப்பு எதிர்வினை
தெரு நாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
நேற்றைய விசாரணையில், ``தெரு நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை, விலங்குகள் நல ஆர்வலர்களால் திருப்பிக் கொண்டுவர முடியுமா?" எனக் காட்டமாகக் கேள்வியெழுப்பியது உச்ச நீதிமன்றம்.
மேலும், "டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட மாநகராட்சிகள் உடனடியாக ஒரு தெரு நாய் விடாமல் அனைத்தையும் பிடிக்க வேண்டும்" என்று டெல்லி அரசுக்கு 8 வாரங்கள் கெடு விதித்தது.

இந்த நிலையில், விலங்குகள் நல உரிமைகளுக்காகப் போராடும் பீட்டா (People for the Ethical Treatment of Animals) அமைப்பு உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய உத்தரவுக்கு எதிர்வினையாற்றியிருக்கிறது.
பீட்டா அமைப்பின் India's Senior Director of Veterinary Affairs மினி அரவிந்தன் தனது அறிக்கையில், "சமூகத்தினர் அக்கம் பக்கத்திலுள்ள நாய்களை குடும்பமாக நினைக்கிறார்கள்.
நாய்களை இடம்பெயர்த்து சிறையில் அடைப்பது அறிவியல் பூர்வமானது அல்ல. அது பலனளித்ததும் இல்லை.
2022-23ல் எடுத்த கணக்கெடுப்பின்படி டெல்லியில் 10 லட்சம் நாய்கள் உள்ளன. அவற்றில் பாதிக்கும் குறைவானவை மட்டுமே கருத்தடை செய்யப்பட்டிருக்கின்றன.
இப்போது, டெல்லியின் தெருக்களிலிருந்து 10 லட்சம் நாய்களை அகற்றுவது அவற்றைக் கவனித்துக் கொள்பவர்களிடத்தில் சலசலப்பை ஏற்படுத்தும்.
மேலும் இது மிகப்பெரிய அளவில் நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.
இறுதியில் நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவோ, வெறி நாய்க்கடியைக் குறைக்கவோ இது ஒன்றும் செய்யாது.

நாய் கருத்தடை திட்டத்தை டெல்லி அரசு ஒழுங்காகச் செயல்படுத்தியிருந்தால், இன்று சாலையில் எந்த நாய்களும் இருந்திருக்காது.
பயனற்ற மற்றும் மனிதாபிமானமற்ற இடப்பெயர்ச்சி நடவடிக்கைகளில் நேரம், பொதுமக்களின் பணம் வீணாக்குவதற்குப் பதில், கருத்தடை திட்டமே இன்னும் தீர்வாகவும் அவசரத் தேவையாகவும் உள்ளது.
சட்டவிரோதமாகச் செயல்படும் செல்லப்பிராணி கடைகளை மூட வேண்டும். தெருநாய்களை காப்பகங்களில் சேர்ப்பது அல்லது தத்தெடுக்க வைப்பது ஆகியவற்றுக்கு மக்களை ஊக்கப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.