மனு கொடுக்க சென்ற விஏஓ-க்களை ‘வெளியே போ’ எனக் கூறிய உதவி ஆட்சியர்.! முற்றுகை போர...
பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை!
பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருத்தணி அருகே பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த வி.கே.என்.கண்டிகை பகுதியைச் சேர்ந்த 15 வயது பள்ளி சிறுமியை, கடந்த 2021-இல் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்(24) என்பவர், ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸோர் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் சிறையில் இருந்த வெங்கடேசன் பிணையில் வெளியே வந்தார். தொடர்ந்து, இந்த வழக்கு திருவள்ளூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இவ்வழக்கின் இறுதி விசாரணை, போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன்பாக புதன்கிழமை வந்தது. அப்போது, குற்றம் உறுதியானதால் வெங்கடேசனுக்கு 12 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, வெங்கடேசனை திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் பதுகாப்பாக அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக விஜயலட்சுமி ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இன்றைய தக்காளி விலை நிலவரம்! ஒரு கிலோ ரூ.100 ஆனது!!