Fahad Fazil:"பகத் பாசில் ரூ.65,000 சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நேரத்தில்"- தயாரிப்பாளர் ஸ்டீபன்
மலையாளத் திரையுலகில் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் லிஸ்டின் ஸ்டீபன். பகத் பாசிலின் சினிமா பயணத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்த 'Chaappa Kurishu' படத்தைத் தயாரித்தவர்.
ஆரம்பத்தில் பகத் பாசில் நடித்த Debut (2002), Kerala Cafe (2009) திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பகத் நடித்தத் திரைப்படம்தான் இந்த 'Chaappa Kurishu'. இந்தப் படம் மூலம் மலையாளத் திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றார் பகத்.

சமீபத்தில் நடந்த 'தென்னிந்திய திரைப்பட அகாடமி' நிகழ்ச்சியில் 'Chaappa Kurishu' படத்தைத் தயாரித்தது குறித்தும், அப்போது பகத் வாங்கிய சம்பளம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன்.
இதுகுறித்துப் பேசியிருக்கும் ஸ்டீபன், "அந்தப் படத்திற்கு பகத் பாசில் சரியாக இருப்பார் என்று நினைத்து கதையை அவரிடம் சொன்னோம். அப்போது அந்தக் கதாபாத்திரம் பகத்துக்குப் பிடித்துபோக 'எவ்வளவு சம்பளம்' வேண்டுமென்று கேட்டேன். அதற்கு பகத், 'உங்களுக்கு எவ்வளவு கொடுக்க விருப்பமோ அவ்வளவு கொடுங்கள், இதற்கு முன் ரூ.65000 வாங்கிக் கொண்டிருந்தேன்' என்றார்.
அதைக் கேட்டுவிட்டு ரூ.1 லட்சம் தருகிறேன் என்றேன். முதன்முதலாக ஒரு லட்சம் சம்பளம் கொடுத்தேன் பகத் பாசிலுக்கு. ஆனால், இன்று பகத் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார். ரூ.5 கோடி, ரூ 10 கோடி என எவ்வளவு கொடுத்தாலும் அவரைப் பிடிப்பதே சிரமம். அதுதான் சினிமாவின் மேஜிக்" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...