சுதந்திர தினத்தில் சத்தீஸ்கர் மசூதிகளில் தேசியக்கொடி ஏற்ற வக்ஃபு வாரியம் உத்தரவு!
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மசூதிகள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என வக்ஃப் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மாநில வக்ஃப் வாரியத் தலைவர் டாக்டர் சலீம் ராஜ் கூறுகையில்,
மூவர்ணக் கொடி "கௌரவம் மற்றும் பெருமையின் சின்னம்". அது எந்த மதத்துடனும் இணைக்கப்படவில்லை என்றும் அனைத்து முத்தவல்லிகளுக்கும் (வக்ஃப் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள்) கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த தேசிய விழாவில், சத்தீஸ்கரில் உள்ள அனைத்து மசூதிகள், மதரஸாக்கள் மற்றும் தர்காக்களின் பிரதான வாயிலில் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டும்.
சுதந்திர தினத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, தேசபக்தி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வளர்ப்பதன் மூலம் அதன் கண்ணியத்தைப் பேணுங்கள்" என்று மசூதிகள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களின் முத்தவல்லிகளுக்கு வாரியம் வாரியம் கடிதத்தில் தெரிவித்துள்ளது.
சில மசூதிகள் மற்றும் மதரஸாக்கள் கொடி ஏற்றும் விழாக்களை நடத்துவதில்லை. மூவர்ணக் கொடிக்கு மரியாதை என்பது ஒவ்வொரு மதத்திற்கும் மேலானது. அதை ஏற்றுவதில் எந்த ஆட்சேபனையும் இருக்கக்கூடாது இந்த கடிதத்தில் கூறியுள்ளார்.