மகாபாரதப் பணிகளைத் துவங்கும் ஆமிர் கான்!
நடிகர் ஆமிர் கான் மகாபாரதத்தை திரைப்படமாக்கும் திட்டத்தைத் துவங்கவுள்ளார்.
பாலிவுட்டின் நட்சத்திர நடிகரான ஆமிர் கான் கடந்த சில ஆண்டுகளாகவே மார்க்கெட் இழந்த நடிகராக இருக்கிறார். காரணம், லால் சிங் சத்தா தோல்வியால் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்வதில்லை.
அதேநேரம், இறுதியாக வெளியான சித்தாரே சமீன் பர் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த்துடன் கூலி திரைப்படத்தில் நடித்துள்ளார். இது, அவருக்கு நல்ல வணிக வெற்றிப் படமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஆமிர் கான், “மகாபாரதத்தைத் திரைப்படமாக்குவதுதான் என் கனவு. அது வெறும் திரைப்படம் அல்ல ஒரு யாகம். அதற்கான பணிகளை வருகிற செப்டம்பர் மாதத்தில் துவங்குகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
இப்படத்தை ஆமிர் கானே தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதால் பெரும் பொருள்செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: இதற்காகக் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி: பூஜா ஹெக்டே