மூக்கு துவாரம் வழியாக மூளைக் கட்டி அகற்றம்! மாற்றி யோசித்த மருத்துவர்கள்
அய்யனார் துணை தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்!
அய்யனார் துணை தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சல்மான் இணைந்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி முதல் அய்யனார் துணை என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 8.15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடரில், எதிர்நீச்சல் பிரபலம் மதுமிதா நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கனா காணும் காலங்கள் பிரபலம் அரவிந்த் சேஜு நடிக்கிறார்.
இத்தொடரில் அரவிந்தின் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நடிகர் ரோசரி, இவர்களுக்குத் தந்தையாக நடிக்கிறார்.
நான்கு சகோதர்கள் உள்ள தாய் இல்லாத வீட்டில், மூத்த மருமகளாக வரும் நாயகி (மதுமிதா), எதிர்கொள்ளும் சவால்கள், கூட்டு குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளை ளை மையப்படுத்தியும் அய்யனார் துணை தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அய்யனார் துணை தொடரில் பாக்கியலட்சுமி தொடரில் நடித்த நடிகர் சல்மான் இணைந்துள்ளார்.
இவர் முன்னதாக, அன்பே வா, தமிழும் சரஸ்வதியும், ரஞ்சனி உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: காத்து வாக்குல ரெண்டு காதல் சீரியலுக்கு கிடைத்த அங்கீகாரம்!