செய்திகள் :

ரூ. 5 லட்சம் பட்ஜெட்டில் சொகுசான 5-சீட்டர்: சிட்ரன் “சி3எக்ஸ்” அறிமுகம்!

post image

சொகுசான பயணத்தை விரும்புவோருக்காகவே தமது தயாரிப்புகளில் சஸ்பெசன்சன் தரத்துக்கு அதிக முக்கியத்துவ அளிக்கும் சிட்ரன் நிறுவனத்தால் ரூ. 5 லட்சம் பட்ஜெட்டில் புதிய எஸ்.யூ.வி. ரக கார் “சி3எக்ஸ்” இன்று(ஆக. 12) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிட்ரன் நிறுவன கார்களில் இல்லாத வகையிலான 15 கூடுதல் அம்சங்கள் இந்த கார் மாடலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட்டில் விற்பனையாகும் எஸ்.யூ.வி. மாடல் கார்களில், பல புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சம். சிட்ரன் சி3 மாடலின் மேம்பட்ட ரகமாக வடிவமைக்கப்பட்டுள்ள சி3எக்ஸ் மாடலின் ஆரம்ப விலை ரூ. 5.25 லட்சம்.

“சி3எக்ஸ்” காரில் உள்ள தானியங்கி குளிர்சாதன வசதி(ஆட்டோமேடிக் ஏசி) 14 டிகிரி செல்சியஸ்க்கும் கீழ் குறைந்த வெப்பநிலை வரை குளிரூட்டும் வசதி கொண்டதாக உள்ளது.

பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தவரையில், 6 ஏர் பேக்ஸ் இருப்பதால் காரில் அதிகபட்சமாக செல்லும் 5 பயணிகளுக்கும் மிகுந்த பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதிசெய்துள்ளது சிட்ரன் நிறுவனம்.

சஸ்பென்சன்:

சிட்ரன் நிறுவனம் ஒரு காரை வடிவமைக்கிறது என்றவுடன் அதன் சஸ்பென்சன்(அதிர்வுகளை தாங்கும் திறன்) திறனைக் குறித்தே வாடிக்கையாளர்கள் முதலில் வினவுவர். அந்த அளவுக்கு சஸ்பென்ஷனில் அதிக கவனம் செலுத்தி தமது கார்களை சிட்ரன் வடிவமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், புதிய “சி3எக்ஸ்” மாடல் காரில், ‘சிட்ரன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கார்களில் மிகச்சிறந்த சஸ்பென்சன் அமைப்பு’ பொருத்தப்பட்டுள்ளது. இதனை ‘ப்ளையிங் கார்ப்பெட்’ என்று அந்நிறுவனம் குறிப்பிடுகிறது. இதனால் காரில் பயண சொகுசு உயர்தரத்தில் இருக்குமாம்!

என்ஜின் அம்சங்கள்:

  • 82 பிஎச்பி, 115 என்எம் டார்க் ஆற்றலுடன் கூடிய 5-ஸ்பீடு மேனுவல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின்(நேச்சுரல் ஆஸ்பிரேடட் வகை)

  • 100 பிஎச்பி, 190 என்எம் டார்க் ஆற்றலுடன் கூடிய 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்

  • அதிகபட்ச மைலேஜ் 19.3 கி.மீ.(ஒரு லிட்டருக்கு)

காரில் அதிவேக திறனைப் பொருத்தவரையில், 10 விநாடிகளில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை எட்ட வல்லமை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

காரின் வெளிப்புறத் தோற்றத்தைப் பொருத்தவரையில், ஒரே நிறத்திலான(மோனோடோன் - 5 நிறங்களில் ஏதாவதொன்றை கார் முழுவதும் கொண்டதாக கிடைக்கிறது) டிசைன் கொண்டதாகவும், அல்லது இரண்டு நிறங்களில்(டூயல் டோன் - 2 நிறங்களில்) டிசன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

காரின் உள்புறத்தில் 3 வகையான தோற்றப் பொலிவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சிட்ரன் “சி3எக்ஸ்” மாடல் விலை ரூ. 9,89,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது(விலை மாற்றத்துக்கு உட்பட்டது). அடிப்படை மாடல் காரின் விலை ரூ. 5,25,000-லிருந்து ஆரம்பமாகிறது.

காருக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுவிட்டது. செப்டம்பர் முதல் வாரத்தில் டெலிவரி செய்ய சிட்ரன் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

Citroen C3X range, new edition of the Citroen C3 is designed to deliver elevated comfort

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.87.72 ஆக நிறைவு!

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் எதிர்மறையான போக்கு நிலவிய நிலையில், செவ்வாய்க்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறுகிய வரம்பில் ஒருங்கிணைந்து 3 காசுகள் உயர்ந்து ரூ.87.72 ஆக ந... மேலும் பார்க்க

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், எஃப்எம்சிஜி மற்றும் நிதித்துறையில் ஏற்பட்ட விற்பனை அழுத்தம் காரணமாக நிஃப்டி 50 பங்குகள் 24,500 புள்ளிகளுக்குக் கீழே சரிந்து முடிவடைந்தன.நிலையற்ற வர்த்தகம், ... மேலும் பார்க்க

சுதந்திர நாளையொட்டி ஃபிளிப்கார்ட்டில் தள்ளுபடி விற்பனை! சலுகைகள் என்னென்ன?

ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் சுதந்திர நாளையொட்டி ஆக. 13 முதல் 17ஆம் தேதி வரை சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள், மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொரு... மேலும் பார்க்க

கேமரா பிரியர்களுக்காக... விவோ வி 60 அறிமுகம்!

விவோ வி60 என்ற புதிய ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட்போனில் கேமராவை அதிகம் விரும்புபவர்களுக்கான விருப்பத் தேர்வாக விவோ வி60 இருக்கும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரி... மேலும் பார்க்க

அமேசானில் ரூ. 32,780-க்கு ஐபோன் 15 வாங்கலாம்! ரூ. 47,120 தள்ளுபடி பெறுவது எப்படி?

ரூ. 80,000 விலை உடைய ஐபோன் 15 ஸ்மார்ட்போனை ரூ. 47,120 தள்ளுபடி பெற்று வெறும் ரூ. 32,780க்கு அமேசான் இணைய விற்பனை தளத்தில் வாங்கலாம். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே க... மேலும் பார்க்க

ஜேஎம் ஃபைனான்சியல் நிறுவனத்தின் லாபம் ரூ.454 கோடியாக உயர்வு!

புதுதில்லி: ஜேஎம் ஃபைனான்சியல் 2026, ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 166 சதவிகிதம் உயர்ந்து ரூ.454 கோடியாக உள்ளதாக அறிவித்துள்ளது.நிதிச் சேவை சேர்ந்த இந்த நிறுவனம், கடந்த ஆண்டு இதே... மேலும் பார்க்க