செய்திகள் :

அமேசானில் ரூ. 32,780-க்கு ஐபோன் 15 வாங்கலாம்! ரூ. 47,120 தள்ளுபடி பெறுவது எப்படி?

post image

ரூ. 80,000 விலை உடைய ஐபோன் 15 ஸ்மார்ட்போனை ரூ. 47,120 தள்ளுபடி பெற்று வெறும் ரூ. 32,780க்கு அமேசான் இணைய விற்பனை தளத்தில் வாங்கலாம்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே குறிப்பிடத்தகுந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருவது வாடிக்கையாகவே உள்ளது. அந்தவகையில் தற்போது, அமேசான் இணைய விற்பனை தளத்தில் முன் எப்போதும் இல்லாத சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகையை தற்போதும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொண்டு கணிசமான தொகையை சேமித்துக்கொண்டு, குறைந்த விலையில் ஐபோன் 15-ஐ வாங்கலாம்.

அமேசான் தள்ளுபடி

ஐபோன் 15 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ. 79,900. ஆனால், அமேசான் இணைய விற்பனை தளத்தில் 12% தள்ளுபடியுடன் ரூ. 61,400க்கு விற்கப்படுகிறது. ஆனால், இதில் மேலும் விலைக் குறைப்பை ஆப்பிள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்களால் பெறமுடியும்.

இதற்கு முன்பு ஐபோன் 14 ஸ்மார்ட்போனை பயன்படுத்துபவராக நீங்கள் இருந்தால், அதனை ரூ. 25,550 வரையிலான தொகைக்கு அமேசானிடமே பரிமாற்றம் செய்துகொள்ளலாம். இதனால், புதிதாக வாங்கும் ஐபோன் 15 விலை ரூ. 35,850ஆக குறையும்.

மேலும், ஐசிஐசிஐ வங்கி கடன் அட்டை வைத்திருந்தால், கூடுதலாக ரூ. 3,070 சலுகை பெற்று, வட்டியில்லா தவணை முறையில் எடுத்துக்கொள்ளலாம். இந்த சலுகைகளையெல்லாம் கழித்துவிட்டு ரூ. 32,780 செலுத்தி ஐபோன் 15ஐ பெறலாம். இதன்மூலம் பயனர்களால் ரூ. 47,120 சேமிக்க முடியும்.

இதையும் படிக்க | ஜியோ பயனர்கள் இலவசமாக நெட்ஃபிளிக்ஸ் பார்க்கலாம்! எப்படி?

iPhone 15 Gets A Massive Price Drop Of Rs 47,120 On Amazon, Now Available For Rs 32,780

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், எஃப்எம்சிஜி மற்றும் நிதித்துறையில் ஏற்பட்ட விற்பனை அழுத்தம் காரணமாக நிஃப்டி 50 பங்குகள் 24,500 புள்ளிகளுக்குக் கீழே சரிந்து முடிவடைந்தன.நிலையற்ற வர்த்தகம், ... மேலும் பார்க்க

சுதந்திர நாளையொட்டி ஃபிளிப்கார்ட்டில் தள்ளுபடி விற்பனை! சலுகைகள் என்னென்ன?

ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் சுதந்திர நாளையொட்டி ஆக. 13 முதல் 17ஆம் தேதி வரை சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள், மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொரு... மேலும் பார்க்க

கேமரா பிரியர்களுக்காக... விவோ வி 60 அறிமுகம்!

விவோ வி60 என்ற புதிய ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட்போனில் கேமராவை அதிகம் விரும்புபவர்களுக்கான விருப்பத் தேர்வாக விவோ வி60 இருக்கும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரி... மேலும் பார்க்க

ரூ. 5 லட்சம் பட்ஜெட்டில் சொகுசான 5-சீட்டர்: சிட்ரன் “சி3எக்ஸ்” அறிமுகம்!

சொகுசான பயணத்தை விரும்புவோருக்காகவே தமது தயாரிப்புகளில் சஸ்பெசன்சன் தரத்துக்கு அதிக முக்கியத்துவ அளிக்கும் சிட்ரன் நிறுவனத்தால் ரூ. 5 லட்சம் பட்ஜெட்டில் புதிய எஸ்.யூ.வி. ரக கார் “சி3எக்ஸ்” இன்று(ஆக. 1... மேலும் பார்க்க

ஜேஎம் ஃபைனான்சியல் நிறுவனத்தின் லாபம் ரூ.454 கோடியாக உயர்வு!

புதுதில்லி: ஜேஎம் ஃபைனான்சியல் 2026, ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 166 சதவிகிதம் உயர்ந்து ரூ.454 கோடியாக உள்ளதாக அறிவித்துள்ளது.நிதிச் சேவை சேர்ந்த இந்த நிறுவனம், கடந்த ஆண்டு இதே... மேலும் பார்க்க

பேரிடர் நிவாரணத்திற்கு நன்கொடை அளித்த பொதுத்துறை வங்கிகள்!

புதுதில்லி: உத்தரகாண்ட் மாவட்டத்தில் உள்ள தாராலி மற்றும் ஹர்சில் ஆகிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்காக அரசுக்குச் சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் பரோடா ஆகியவை தல... மேலும் பார்க்க