குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்: ஆக. 18-ல் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை
திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம்!
வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் திருப்பதி மலைப் பாதையில் செல்ல வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம் என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருப்பதி திருமலை கோயிலுக்குச் செல்லும் வாகனங்கள் சோதனைக்குப் பிறகும் அலிபிரி சோதனைச் சாவடியில் கட்டணம் செலுத்திய பிறகும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சோதனைச் சாவடிகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதால் ஃபாஸ்டேக் முறையில் கட்டண வசூலிப்பு நடைமுறைக்கு வரவிருக்கிறது.
வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் திருப்பதி மலையில் செல்லும் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம் எனவும் ஃபாஸ்டேக் இல்லாதவர்கள் புதிதாகப் பெற ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து அலிபிரி சோதனைச் சாவடியில் ஃபாஸ்டேக் மையங்கள் அமைக்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் அதனைப் பெற்ற பிறகே அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.