குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்: ஆக. 18-ல் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை
“தேர்தல் ஆணையம் அல்ல; தேர்தல் திருடன்!” -ஆர்ஜேடியின் பகிரங்க விமர்சனம்!
இந்திய தேர்தல் ஆணையத்தை ‘இந்திய தேர்தல் திருடன்!’ என்று ஆர்ஜேடி கட்சி எம்.பி. சஞ்சய் யாதவ் விமர்சித்துள்ளார்.
பிகாரில் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) மற்றும் வாக்குத் திருட்டு ஆகியவற்றுக்கெதிரான எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, ராஷ்திரிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் யாதவ் செவ்வாய்க்கிழமை(ஆக. 12) பேசியதாவது: “தேர்தல் ஆணையம் ஜனநாயகத்துக்கு எதிரான குழுவாக” செயல்படுவதாக விமர்சித்தார்.
மேலும், “இந்திய தேர்தல் ஆணையமானது இந்திய தேர்தல் திருடனாக மாறிவிட்டதாகவும்” அவர் பகிரங்கமாக விமர்சனத்தை சுமத்தியுள்ளார்.