குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்: ஆக. 18-ல் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை
வாக்காளர் பட்டியல் முறைகேடுக்கு எதிராக பிரசாரம்: காங்கிரஸ் ஆலோசனை!
வாக்காளர் பட்டியல் முறைகேடு மற்றும் தேர்தல் மோசடிக்கு எதிராக தேசிய அளவில் பிரசாரத்தில் ஈடுபடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி இன்று (ஆக. 12) ஆலோசனையில் ஈடுபட்டது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் மற்றும் முன்னணி அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சச்சின் பைலட், கே.சி. வேணுகோபால், குமாரி செல்ஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, வாக்காளர் பட்டியல் முறைகேடுக்கு எதிராக, தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவித்து தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து ஜந்தர் மந்தர் வரையிலும் இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் பேரணியில் ஈடுபட்டனர்.
தேர்தல் ஆணையத்தின் தரவுகளுடன் வாக்குத் திருட்டு குறித்து ஆதாரத்துடன் மத்திய அரசை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை ராகுல் காந்தி எழுப்பியிருந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகள் அந்தந்த பகுதிகளுக்கேற்ப ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளன.