செய்திகள் :

Stray Dogs: "தெரு நாய்களை வெளியேற்றுவது இரக்கமற்றது" - உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ராகுல் கண்டனம்

post image

தெரு நாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

நேற்றைய விசாரணையில், "டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உடனடியாக ஒரு தெருநாய் விடாமல் அனைத்தையும் பிடிக்க வேண்டும். இதற்காக சிறப்புப் படை வேண்டுமானாலும் உருவாக்கிக் கொள்ளலாம்" என டெல்லி அரசுக்கு 8 வாரங்கள் காலக்கெடு விதித்தது உச்ச நீதிமன்றம்.

மேலும், "பிடிக்கப்படும் நாய்களை காப்பகங்களில் அடைத்து, கருத்தடை ஊசி போட்டுப் பராமரிக்க வேண்டும்" என்றும் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

பீட்டா குற்றச்சாட்டு

இதற்கு எதிர்வினையாற்றிய பீட்டா (People for the Ethical Treatment of Animals) அமைப்பு, நாய்களை இடம்பெயர்த்து சிறையில் அடைப்பது அறிவியல் பூர்வமானது அல்ல என்றும், இது மிகப்பெரிய அளவில் நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அறிக்கை வெளியிட்டது.

அதோடு, டெல்லியில் இவ்வளவு நாய்கள் திரிவதற்கு டெல்லி அரசு முறையாக கருத்தடை திட்டத்தைச் செயல்படுத்தாததே கரணம் என்றும் குற்றம்சாட்டியது.

மேனகா காந்தி கேள்வி

அதேபோல், விலங்குகள் நல ஆர்வலரும், பா.ஜ.க முன்னாள் எம்.பி-யுமான மேனகா காந்தி, "இது கோபத்தில் ஒருவர் வழங்கிய மிகவும் விசித்திரமான தீர்ப்பு. லட்சக்கணக்கான நாய்களுக்குக் காப்பகங்கள் அமைப்பதற்கு ரூ.15,000 கோடி ஆகும். டெல்லி அரசிடம் ரூ.15,000 கோடி இருக்கிறதா?" என்று கேள்வியெழுப்பினார்.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தெருக்களிலிருந்து நாய்களை அகற்றுவது இரக்கமற்ற செயல் எனத் தெருநாய்கள் நலனுக்கு ஆதரவுக் குரல் தெரிவித்திருக்கிறார்.

தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் காந்தி, "டெல்லியிலிருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவானது, பல தசாப்தங்களாக மனிதாபிமான மற்றும் அறிவியல் ரீதியாக உருவாக்கப்பட்ட நம் கொள்கையிலிருந்து ஓரடி பின்வாங்குவதாகும்.

இந்த வாயில்லா ஜீவன்கள் அழிக்கப்படவேண்டிய பிரச்னை அல்ல.

அவற்றைக் கொடுமைப்படுத்தாமல் தங்குமிடங்கள், கருத்தடை, தடுப்பூசி, சமூக பராமரிப்பு ஆகியவற்றின் மூலம் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

தெருக்களிலிருந்து அவற்றை அகற்றுவது கொடூரமானது, குறுகிய பார்வையுடையது, இரக்கமற்றது.

பொதுமக்களின் பாதுகாப்பும் விலங்குகளின் நலனும் பாதுகாக்கப்படுவதை நாம் உறுதிசெய்ய முடியும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group.

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும். https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முதல் கியூப ஒருமைப்பாட்டு விழா வரை - 12.08.2025 முக்கியச் செய்திகள்!

12.08.2025 முக்கியச் செய்திகள்தெருநாய்கள் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, "தெருக்களிலிருந்து நாய்களை அகற்றுவது கொடூரமானது, குறுகிய பார்வையுடையது, இரக்கமற்றது." எ... மேலும் பார்க்க

ECI : ஒரே தொகுதியில் 6 வாக்குகள்; First Time Voter -க்கு 124 வயது? | DMK STALIN BJP |Imperfect Show

* பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்! - இந்தியா* பாகிஸ்தானை ஆதரிக்கும் அமெரிக்கா!* காங்கிரஸ் கட்சி கண்டனம்!* அமளிக்கு நடுவே மசோதாக்கள் தொடர்ந்து நிறைவேற்றம்?* பழைய ஓய்வுதியம் திட்டத்தை மீ... மேலும் பார்க்க

கியூப ஒருமைப்பாட்டு விழா: "அடிமைத்தனத்தைப் பற்றி எடப்பாடி பேசலாமா?" - ஸ்டாலின் சாடல்!

மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கியூபா ஒருமைப்பாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். சோசலிச கியூபாவைக் காப்போம், ஏகாதிபத்திய சதிகளை முறியடிப்போம், பிடல்காஸ்ட்ரோவின் நூற்றாண... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலைப் படையை தீவிரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்கா!

பாகிஸ்தானில் செயல்படும் பலுசிஸ்தான் விடுதலைப் படை (Balochistan Liberation Army (BLA)) என்ற அமைப்பை தீவிரவாத அமைப்பாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது அமெரிக்கா. மஜீத் படைப்பிரிவு என்ற அமைப்பும் இதில் அடங... மேலும் பார்க்க