செய்திகள் :

பேரிடர் நிவாரணத்திற்கு நன்கொடை அளித்த பொதுத்துறை வங்கிகள்!

post image

புதுதில்லி: உத்தரகாண்ட் மாவட்டத்தில் உள்ள தாராலி மற்றும் ஹர்சில் ஆகிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்காக அரசுக்குச் சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் பரோடா ஆகியவை தலா ரூ. 1 கோடி பங்களித்துள்ளன.

இந்த முடிவு உத்தரகாண்ட் மக்களுடனான பஞ்சாப் நேஷனல் வங்கியின் வேரூன்றிய பிணைப்பை பிரதிபலிக்கிறது என்றும் ஆகஸ்ட் 5, 2025 அன்று மாநிலத்தைத் தாக்கிய கனமழையின் பிரதிபலிப்பாக இது வந்துள்ளது என்றது வங்கி.

ஒன்றாக நாம் குணமடைவோம், மீண்டும் கட்டியெழுப்புவோம், எப்போதும் இல்லாத அளவுக்கு வலிமையாக வெளிப்படுவோம் என்றார் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அசோக் சந்திரா.

தாராலி மற்றும் ஹர்சிலில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடியை நன்கொடையாக வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்ட உத்தரகண்ட் மக்களுக்கு ஆதரவளித்துள்ளதாக தெரிவித்துள்ளது பாங்க் ஆஃப் பரோடா.

இதையும் படிக்க: தில்லி-வாஷிங்டனுக்கான விமான சேவையை நிறுத்துவதாக ஏர் இந்தியா அறிவிப்பு!

ஜேஎம் ஃபைனான்சியல் நிறுவனத்தின் லாபம் ரூ.454 கோடியாக உயர்வு!

புதுதில்லி: ஜேஎம் ஃபைனான்சியல் 2026, ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 166 சதவிகிதம் உயர்ந்து ரூ.454 கோடியாக உள்ளதாக அறிவித்துள்ளது.நிதிச் சேவை சேர்ந்த இந்த நிறுவனம், கடந்த ஆண்டு இதே... மேலும் பார்க்க

தில்லி-வாஷிங்டனுக்கான விமான சேவையை நிறுத்துவதாக ஏர் இந்தியா அறிவிப்பு!

புதுதில்லி: ஏர் இந்தியா நிறுவனம் செப்டம்பர் 1 முதல் புதுதில்லி மற்றும் வாஷிங்டன் இடையேயான விமான சேவையை நிறுத்துவதாக இன்று அறிவித்துள்ளது.இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் பல போயிங் 787 ட்ரீம்லைனர் வி... மேலும் பார்க்க

பங்கு பிரிப்பு மற்றும் போனஸ் குறித்த அறிவிப்பை வெளியீட்ட வெல்கியூர்!

புதுதில்லி: வெல்கியூர் நிறுவனத்தின் வாரியமானது ஆகஸ்ட் 22 தேதியன்று ஒன்றுகூடி நிறுவனத்தின் பங்கு பிரிப்பு மற்றும் போனஸ் வெளியீடு குறித்த அறிவிப்பை பரிசீலிக்கும் என்றது.பங்குச் சந்தை தாக்கல் ஒன்றில், வெ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.87.66 ஆக நிறைவு!

மும்பை: இறக்குமதியாளர்களுக்கு தொடர்ச்சியாக டாலர் தேவையும், இதனை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மீட்சியாலும், இந்திய ரூபாய் மதிப்பு இன்று 8 காசுகள் சரிந்து ரூ.87.66 ஆக நிறைவடைந்தது.கச்சா எண்... மேலும் பார்க்க

மீண்டும் காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 746 புள்ளிகளுடனும், நிஃப்டி 221 புள்ளிகளுக்கு மேல் நிறைவு!

மும்பை: புதிய அந்நிய நிதி வரவுகள் மத்தியில் எண்ணெய், ஆட்டோ மற்றும் வங்கி பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியதையடுத்து இன்றைய பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் 746 புள்ளிகள் உயர்ந்து 80,000 புள்ளியைத் கடந... மேலும் பார்க்க

ஜியோ பயனர்கள் இலவசமாக நெட்ஃபிளிக்ஸ் பார்க்கலாம்! எப்படி?

ஜியோ பயனர்கள் எந்தவித கட்டணமுமின்றி இலவசமாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தைப் பார்க்கும் வகையில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களில் ரீசார்ஜ் செய்தால், தினசரி இணையம், அளவ... மேலும் பார்க்க