சீரியலுக்குள்ள இவ்ளோ politics இருக்குன்னே எனக்குத் தெரியாது...! - Singer Soundar...
ஜியோ பயனர்கள் இலவசமாக நெட்ஃபிளிக்ஸ் பார்க்கலாம்! எப்படி?
ஜியோ பயனர்கள் எந்தவித கட்டணமுமின்றி இலவசமாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தைப் பார்க்கும் வகையில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டங்களில் ரீசார்ஜ் செய்தால், தினசரி இணையம், அளவற்ற அழைப்புகள், ஜியோ டிவி / ஜியோ கிளவுட் பயன்களை பயனர்கள் அனுபவிக்கலாம் எனவும் ஜியோ தெரிவித்துள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு சேவையில் முன்னணியில் உள்ள ஜியோ நிறுவனம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தை இலவசமாகத் தருவதன் மூலம், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
இதற்காக கூடுதலாக எந்தவொரு ரீசார்ஜும் தேவையில்லை, எந்தவொரு படிவத்தையும் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை என ஜியோ தெரிவித்துள்ளது.
முதல் திட்டம்
ஜியோ பயனர்கள் ரூ. Rs 1,299-க்கு ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 2GB வீதம் 84 நாள்களுக்கு பயன்படுத்தலாம். இவற்றுடன் அளவற்ற அழைப்புகள், நாளொன்றுக்கு 100 குறுஞ்செய்திகள் வழங்கப்படுகின்றன.
கூடுதலாக 84 நாள்களுக்கும் இலவசமாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தைப் பார்த்துக்கொள்ளலாம். இவற்றுடன் ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட்ஸ் ஆகியவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இரண்டாவது திட்டம்
ஜியோ பயனர்கள் ரூ. 1,799-க்கு ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 3GB வீதம் 84 நாள்களுக்கு இணையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இவற்றுடன் அளவற்ற அழைப்புகள், நாளொன்றுக்கு 100 குறுஞ்செய்திகள் வழங்கப்படுகின்றன.
மேலும், கூடுதலாக ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட்ஸ் உடன் நெட்ஃபிளிக்ஸ் தளத்தையும் இலவசமாக பார்த்துக்கொள்ளலாம்.
மேலும், மற்ற திட்டங்களைக் காட்டிலும் இந்த திட்டத்தில் கூடுதல் தரவுகளைக் கோரும் விடியோ கேம், மேம்பட்ட விடியோ அழைப்புகள், பெரிய கோப்புகளை தரவிறக்கம் செய்வது போன்றவை சாத்தியப்படும் என ஜியோ தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | இதுவரை இல்லாத பேட்டரி திறன்: ஓப்போ கே 13 டர்போ இந்தியாவில் அறிமுகம்!