மினிமம் பேலன்ஸ் ரூ.50 ஆயிரம்!ஐசிஐசிஐ அதிரடி!!
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி, சாமானிய மக்களுக்கான வங்கி என்ற நிலையிலிருந்து தடம்மாறியிருக்கிறது.
ஐசிஐசிஐ வங்கி, தன்னுடைய வங்கிக் கிளைகளில் புதிதாக சேமிப்புக் கணக்குத் தொடங்கும் வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்பைக் கடுமையாக அதிகரித்துள்ளது. அதாவது, பெரு நகரங்களில், ஆகஸ்ட் 1 முதல் வங்கிக் கணக்குத் தொடங்கும் புதிய வாடிக்கையாளர்கள், தங்களது வங்கிக் கணக்கில் மாதாந்திர குறைந்தபட்ச இருப்பு சராசரி என்பதை ரூ.50,000 ஆக வைத்திருக்க வேண்டும் என்று மாற்றியிருக்கிறது. இது ஒரு வாரத்துக்கு முன்பு வரை ரூ.10,000 ஆக இருந்தது.
இந்தியாவில் உள்ள வேறெந்த வங்கிகளைக் காட்டிலும் ஐசிஐசிஐ வங்கியின் குறைந்தபட்ச இருப்புத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய மாற்றத்தின்படி, பெரு நகரங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள ஐசிஐசிஐ வங்கிகளில் புதிய கணக்குத் தொடங்க விரும்புவோருக்கு ரூ.50,000 ஆக குறைந்தபட்ச இருப்புத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக ரூ.10,000 ஆக இருந்தது.
புறநகர் பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளில் கணக்குத் தொடங்குவோர், மாதாந்திர குறைந்தபட்ச சராசரி இருப்பாக ரு.25,000-ஐ வைத்திருக்க வேண்டும். இது முன்பு ரூ.5,000 ஆக இருந்தது.
கிராமப் பகுதிகளில் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.10 ஆயிரத்தை குறைந்தபட்ச இருப்பாக வைத்திருக்க வேண்டும். இது ரூ.2500 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.