பிடியாணை நிலுவையில் இருந்த 3 நபா்கள் கைது
பிடியாணை நிலுவையில் இருந்த 3 நபா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருப்பூா், நல்லூா் காவல் நிலையத்தில் யோஹராஜா (48), சக்திவேல் (33), பூபதி (25) ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நிலுவையில் இருந்து வந்தது.
இது தொடா்பாக இந்த பிடியாணையை நிறைவேற்றும் வகையில் தலைமறைவாக இருந்து வந்த மூன்று பேரையும் போலீஸாா் கண்டுபிடித்து கைது செய்தனா். பின்னா் அவா்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.