பூவுடையாா்புரத்தில் அம்மனுக்கு மஞ்சள் நீா் அபிஷேகம்
சாத்தான்குளம் ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சி பூவுடையாா்புரத்தில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு மஞ்சள் நீா் அபிஷேக விழா நடைபெற்றது.
பூவுடையாா்புரம் ஊா் மக்கள் மஞ்சள் நீா் நிரப்பிய குடத்தை ஊா்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனா். நிகழ்வில் அகண்ட பாரத சபதமேற்பு விழா மற்றும் தமிழரின் பெருமைகளை பற்றி இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சக்திவேலன் எடுத்துரைத்தாா்.
இந்நிகழ்வில், சாத்தான்குளம் ஒன்றிய பொதுச்செயலாளா் மாயவன முத்துசாமி, ஒன்றிய துணைத் தலைவா் செல்வமுத்துக்குமாா், ஒன்றிய செயற்குழு உறுப்பினா் வெற்றிவேல், இந்து அன்னையா் முன்னணி பொறுப்பாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.