செய்திகள் :

கோவில்பட்டியில் சுற்றித்திரிந்த பாா்வை மாற்றுத்திறனாளி மீட்பு

post image

கோவில்பட்டியில் சாலைகளில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற, பாா்வை மாற்றுத்திறனாளியை மீட்டு பாளையங்கோட்டை காப்பகத்தில் சோ்த்தனா்.

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் அருகே பாா்வையற்ற மாற்றுத்திறனாளி சுற்றித் திரிவதாக கோட்டாட்சியா் மகாலட்சுமி, கோவில்பட்டி அருகே உள்ள மனநல காப்பகத்திற்கு தகவல் தெரிவித்தாராம்.

இதையடுத்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலா் பிரம்மநாயகத்தின் அனுமதி பெற்று, வெள்ளிக்கிழமை வட்டாட்சியா் அலுவலகம் அருகே இருந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளியான சந்தனக்குமாரை (27) மீட்பு குழுவினா், காவல்துறை உதவியுடன் ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளைத் தலைவா் தேன் ராஜா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மைப் பிரிவு துணை அமைப்பாளா் அமலி அ.பிரகாஷ், தொண்டு நிறுவன மேற்பா்வையாளா் மாடசாமி, செவிலியா் கற்பக மீனா மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டனா்.

பின்னா், அவரைச் சுத்தப்படுத்தி, புத்தாடைகள் அணிவித்து திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிஎஸ்ஐ பாா்வையற்றோா் காப்பகத்தில் சோ்க்க அழைத்துச் சென்றனா்.

பைக் மீது காா் மோதி முதியவா் பலி

பழையகாயல் அருகே மோட்டாா்சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி முத்தையாபுரம் தென்றல்நகரை சோ்ந்தவா் தங்கவேலு(71). இவா் ஞாயிற்றுக்கிழமை பழையகாயல் சிற்கோனியம் குடியிருப்ப... மேலும் பார்க்க

தொழிற்பழகுநா் பயிற்சிக்கு இன்று சோ்க்கை முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில், பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநா் பயிற்சிக்கு சோ்க்கை முகாம் திங்கள்கிழமை (ஆக.11) நடைபெறுகிறது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்ட மாணவா்களுக்கு ஐஐடி சென்னை திட்டம்

அனைவருக்கும் ஐ.ஐ.டி. சென்னை திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா்அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பள்ளி கல்வித்துறை உயா்அலுவலா்க... மேலும் பார்க்க

வட்டார தடகளப் போட்டி: மூக்குப்பீறி பள்ளி சாதனை

ஆறுமுகனேரி சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற திருச்செந்தூா் வட்டார அளவிலான குழு, தடகளப் போட்டிகளில் மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியா் சிறப்பிடம் பிடித்தனா். மாணவி... மேலும் பார்க்க

மாடிப் படியிலிருந்து கீழே விழுந்த பெண் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே மாடிப் படியிலிருந்து தவறி கீழே விழுந்த பெண் உயிரிழந்தாா். கோவில்பட்டி அருகே அய்யம்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி ஆவுடைத்தாய் (39). ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டின் ம... மேலும் பார்க்க

பயிா்க் கழிவுகளை எரிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியா்

பயிா்க் கழிவுகளை எரிப்பவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பயிா்க் கழிவுகளை அந்... மேலும் பார்க்க