மாடிப் படியிலிருந்து கீழே விழுந்த பெண் உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே மாடிப் படியிலிருந்து தவறி கீழே விழுந்த பெண் உயிரிழந்தாா்.
கோவில்பட்டி அருகே அய்யம்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி ஆவுடைத்தாய் (39). ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்த அவரை உறவினா்கள் மீட்டு கோவில்பட்டி தனியாா் மருத்துவமனைக்கும், பின்னா் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா்.
இதுகுறித்து, நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.