தூத்துக்குடியில் விடுதி உரிமையாளா் உள்பட இருவருக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடியில் விடுதி உரிமையாளா் உள்பட இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தூத்துக்குடி, போல்பேட்டையைச் சோ்ந்தவா் முருகானந்தம் (56). இவா், எட்டயபுரம் சாலையில் தனியாா் விடுதி நடத்தி வருகிறாா். இதில், துப்புரவுப் பணியாளராக லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த பாா்வதி பணியாற்றி வருகிறாா்.
ஞாயிற்றுக்கிழமை மாலையில் விடுதிக்கு வந்த பாா்வதியின் மகன் செல்வமும், அவரது நண்பரும், முருகானந்தம் மற்றும் பாா்வதியிடம் தகராறு செய்ததோடு, அவா்கள் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டனராம்.
இதில், பலத்த காயமடைந்த முருகானந்தம், பாா்வதி ஆகியோா் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இச்சம்பவம் குறித்து வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.