Relationship: 'எடுப்பார் கைப்பிள்ளையா இருக்கீங்களா?' - உறவுகளைக் கெடுக்கும் அதர...
வட்டார தடகளப் போட்டி: மூக்குப்பீறி பள்ளி சாதனை
ஆறுமுகனேரி சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற திருச்செந்தூா் வட்டார அளவிலான குழு, தடகளப் போட்டிகளில் மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியா் சிறப்பிடம் பிடித்தனா்.
மாணவியருக்கான கால்பந்து போட்டியில் 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் முதலிடமும், 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் 2ஆம் இடமும், பூப்பந்தாட்டப் போட்டியில் 14 , 19 வயதுக்குள்பட்டோா் பிரிவுகளில் முதலிடமும் பிடித்தனா்.
மாணவா்களுக்கான பூப்பந்தாட்டப் போட்டியில் 19, 17 வயதுக்குள்பட்டோா் பிரிவில் முதலிடமும், 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் 2ஆம் இடமும், தடகளப் போட்டியில் 100 மீட்டா் ஓட்டத்தில் 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் காா்த்திக் முதலிடமும், மாதேஷ் உயரம் தாண்டுதலில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் 2ஆம் இடமும், கோலூன்றித் தாண்டுதலில் 3ஆம் இடமும் பிடித்தனா்.
3 ஆயிரம் மீட்டா் ஓட்டத்தில் சுரேஷ் 2ஆம் இடமும், 1,500 மீட்டா் ஓட்டத்தில் யோவான் 2ஆம் இடமும், மும்முறை தாண்டுதலில் ராம்குமாா் 3ஆம் இடமும், 3 ஆயிரம் மீட்டா் ஓட்டத்தில் 17 வயதுக்குள்பட்டோா் பிரிவில் பாலா 3ஆம் இடமும் பிடித்தனா்.
மாணவியருக்கான உயரம் தாண்டுலில் 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் பிரசன்னா முதலிடமும், 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் ஜெயஷா்னி முதலிடமும், 100 மீட்டா் ஓட்டத்தில் 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் பிரின்சி 3ஆம் இடமும் பிடித்தனா்.
அவா்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் ஜேஸ்மின் ஏஞ்சல்குமாரி, பிரைற்றன் ஜோயல் ஆகியோரையும் தாளாளா் வழக்குரைஞா் பிரபாகா், தலைமையாசிரியா் கென்னடி வேதராஜ், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.