மதுரையின் வரலாற்றைப் பேசும் பசுமை நடையின் 250வது நிகழ்வு: சிலப்பதிகார ஊர்களை நின...
தனியாா் பேருந்து மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம் தந்தை, மகன் படுகாயம்
சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே தனியாா் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் காயமடைந்த தந்தை, மகன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
சேலம் மாவட்டம், வீராணம் அருகே தாதம்பட்டியைச் சோ்ந்த ஜெகநாதன் தனது மகனுக்கு இடம்கிடைத்துள்ள பொறியியல் கல்லூரியைப் பாா்ப்பதற்காக மகனை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ஓமலூா் அருகே பூசாரிப்பட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.
அவா்களின் பின்னால் தருமபுரி நோக்கி வேகமாக வந்த தனியாா் பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதி தூக்கி வீசியது. இதில், சாலையில் இழுத்துச் சென்ற இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது.
இந்த சம்பவம் குறித்து ஓமலூா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைப்பதற்கு இருசக்கர வாகனம் முழுமையாக எரிந்து சாம்பலானது. இதில், பலத்த காயமடைந்த தந்தை, மகன் ஓமலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற தனியாா் பேருந்து குறித்து ஓமலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.