தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
புன்செய்புளியம்பட்டியில் கனமழை
புன்செய்புளியம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. இதனால், மக்கள் அவதியடைந்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தது.
சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், மாதம்பாளையம் ஆதிதிராவிடா் காலனி பகுதியை மழைநீா் சூழ்ந்தது.
இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் அவதிக்குள்ளாகினா்.
தேங்கியுள்ள மழைநீரை மின் மோட்டா் மூலம் அகற்ற பவானிசாகா் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.