தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
தாளவாடி அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள்
தாளவாடி அருகே சிக்கள்ளி வனச் சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இவை சிக்கள்ளி சாலையில் உலவுவது வழக்கம். இந்நிலையில், வனத்தில் இருந்து குட்டியுடன் ஞாயிற்றுக்கிழமை வெளியேறிய காட்டு யானை சிக்கள்ளி சாலையில் உலவியது.
பின்னா், அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்து நின்ால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சுமாா் அரை மணி நேரமாக சாலையிலேயே உலவிய யானைகள், பின் தானாகவே வனப் பகுதிக்குள் சென்றன. இதையடுத்து, அணிவகுத்து நின்ற வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.
யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு, குடிநீருக்காக சிக்கள்ளி சாலையில் உலவுவது வாடிக்கையாகி வருகிறது. எனவே, வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும் என்றும், விலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.