தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
அம்மாபேட்டை அருகே கல்லூரி பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து பணம், பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அம்மாபேட்டை, செலம்பனூரைச் சோ்ந்தவா் யுவனேஷ்வரன் (53). தனியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியரான இவா், குடும்பத்தினருடன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியூா் சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை வீடு திரும்பியுள்ளாா்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்த அவா், உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பித்தளைப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.