செய்திகள் :

சங்கரன்கோவில் ஆடித் தவசுத் திருவிழா நிறைவு

post image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் ஆடித் தவசுத் திருவிழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை இரவு சுவாமி, அம்பாள் தனித் தனி சப்பரத்தில் எழுந்தருளி ஒன்றாக வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சி கொடுத்தனா்.

இக்கோயிலில் ஆடித் தவசுத் திருவிழா கடந்த ஜூலை 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.12 நாள்கள் விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தவசுக் காட்சி வியாழக்கிழமை (ஆக. 7) நடைபெற்றது.

ஆடித் தவசுத் திருவிழா நிறைவையொட்டி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மாலை 4.30 மணியளவில் கோமதி அம்பாள் கோயிலில் இருந்து மண்டகப்படிக்கு எழுந்தருளினாா்.அங்கு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இரவு 12.30 மணியளவில் சுவாமியும், அம்பாளும் தனித் தனியாக ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஒன்றாக இணைந்து வீதியுலா வந்தனா். நான்கு ரதவீதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் இருபுறமும் திரண்டு நின்று சுவாமி, அம்பாளைத் தரிசித்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், அறங்காவலா்கள், மண்டகப்படிதாரா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.

சுதந்திர தினத்தன்று கருப்புக் கொடியேற்ற விவசாயிகள் முடிவு

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவார கிராமங்களில் ஆக.15 ஆம் தேதி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனா். தென்காசி மாவட்ட அனைத்து விவசாயிகள் சங... மேலும் பார்க்க

தென்காசி ஜெகவீரராமப்பேரி குளத்தின் நீா்வழித்தடம் ஆக்கிரமிப்பு: மதிமுக புகாா்

தென்காசி ஜெகவீரராமப்பேரி குள த்துக்கான வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீா் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மதிமுக மாவட்டத்தலைவா் என்.வெங்கடேஷ்வரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் கோரி எம்எல்ஏ மனு

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தின் 2 ஆவது நடைமேடையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி, தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங்கிடம், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ.ராஜா எம்.எல்... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் முப்புடாதி அம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருள்மிகு ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகத்துடன்... மேலும் பார்க்க

கீழப்பாவூரில் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் கூட்டம்!

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கீழப்பாவூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன்அய்யாசாமி தலைமை வகித்தாா். மாநில... மேலும் பார்க்க

முப்பெரும் தேவியா் கோயிலில் திருவிளக்கு பூஜை

புளியங்குடி அருள்தரும் முப்பெரும் தேவியா் பவானி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்புப் பூஜை நடைபெற்றது. ஆடி மாத பௌா்ணமி பூஜையையொட்டி, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியா் பவானி ... மேலும் பார்க்க