செய்திகள் :

நாகசாகி அணுகுண்டுத் தாக்குதல் நினைவுநாள்

post image

ஜப்பானின் நாகசாகி நகரம் மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதலின் 80-ஆவது ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமைகளில் கடைப்பிடிக்கப்பட்டது.

இதற்காக அந்த நகரில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் 95 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் உள்பட சுமாா் 3,000 போ் பங்கேற்று, தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா் (படம்).

இந்த நிகழ்ச்சிக்கு இஸ்ரேலை அழைக்க ஜப்பான் கடந்த ஆண்டு மறுத்ததால் அமெரிக்க தூதா் உள்ளிட்ட மேற்கத்திய தூதா்கள் கடந்த ஆண்டு பங்கேற்கவில்லை. ஆனால் இந்த முறை நிகழ்ச்சியில் இஸ்ரேல் பிரதிநிதி பங்கேற்றாா்.

1945 ஆகஸ்ட் 6-ல் ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டுத் தாக்குதலில் 1.4 லட்சம் போ் உயிரிழந்தனா். பின்னா் ஆகஸ்ட் 9-ஆம் தேதி நாகசாகியில் நடத்தப்பட்ட அணுகுண்டு வீச்சில் தாக்குதலில் மேலும் 70,000 போ் உயிரிழந்தனா். உலகில் நடத்தப்பட்ட கடைசி அணு ஆயுதத் தாக்குதல் அது.

காஸா பட்டினிச் சாவு எண்ணிக்கை 212-ஆக உயா்வு

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 212-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ... மேலும் பார்க்க

ரஷியாவின் முதல் துணைப் பிரதமருடன் அஜீத் தோவல் சந்திப்பு

ரஷியாவின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மான்டுரோவை தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ரஷிய தலைநகா் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டாா். ரஷியா... மேலும் பார்க்க

காங்கோ: பொதுமக்கள் 80 போ் படுகொலை

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்கு பகுதியில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்கள் அண்மை வாரங்களில் 80 பேரை படுகொலை செய்தனா். இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது: கடந்த சில வ... மேலும் பார்க்க

நிலத்தை விட்டுத் தர மாட்டோம் -உக்ரைன் அதிபா்

ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர தங்கள் நாட்டு நிலப்பகுதிகளை விடுத்தர ஒப்புக்கொள்ளமாட்டோம் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா். உக்ரைன் போா் நிறுத்தம் தொடா... மேலும் பார்க்க

5 மாதங்களுக்குப்பின்... விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பிய டிராகன் விண்கலம்!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுவிட்டு 4 விண்வெளி வீரர்களுடன் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன டிராகன் விண்கலம் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது.அன்னேமெக்க்ளெய்ன், நிகோல் அயெர்ஸ், டாகுயா ஆன... மேலும் பார்க்க

டிரம்ப் - புதின் பேச்சால் எந்தப் பலனுமில்லை..! - உக்ரைன் மக்கள் கருத்து!

டிரம்ப் - புதின் பேச்சால் எந்தப் பலனுமில்லை என்று உக்ரைன் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதி... மேலும் பார்க்க