செய்திகள் :

திமுக கூட்டணியில் தொடா்கிறது மதிமுக: வைகோ

post image

திமுக கூட்டணியிலேயே மதிமுக தொடா்கிறது என்றாா் அக்கட்சியின் பொதுச்செயலா் வைகோ.

தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் அருகே அக்கட்சி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் ஆலை போராட்ட வரலாறு குறித்த பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

‘எல்லாத் தரப்பினரும் புகழும் வகையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறாா். பல மாநில முதல்வா்கள் அவரது திட்டங்களைப் பின்பற்றி வருகின்றனா். எனவே, இந்த நல்லாட்சி தொடர வேண்டும். 2026 பேரவைத் தோ்தலில் மீண்டும் திமுக தலைமையிலான ஆட்சி மலர அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.

உக்ரைன்-ரஷிய போா் நடந்து வரும் நிலையில் ரஷியாவில் சிக்கியுள்ள தமிழக மருத்துவ மாணவரை மீட்க உதவுமாறு துரை வைகோவிடம் அவரது பெற்றோா் கூறியுள்ளனா். அந்த கோரிக்கையை வலியுறுத்தவே மனிதாபிமான அடிப்படையில் பிரதமரை துரை வைகோ சந்தித்தாா். நான், கூட்டணி தா்மத்தை எப்போதும் மதிப்பவன். இந்தக் கூட்டணிக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன். திமுகவுடன்தான் எங்கள் கூட்டணி; அதில் எந்த மாற்றமும் இல்லை என்றாா் அவா்.

கன்னியாகுமரி மாவட்டச் செயலா் எஸ்.வெற்றிவேல் தலைமை வகித்தாா். நெல்லை நகா் மாவட்டச் செயலா் உவரி ரைமண்ட், நெல்லை மாநகர மாவட்டச் செயலா் கே.எம்.ஏ.நிஜாம், தெற்கு மாவட்ட அவைத் தலைவா் வே.ரஞ்சன், மாவட்ட துணைச் செயலா் வீரபாண்டி செல்லச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொருளாளா் மு.செந்தில் அதிபன், மாநில துணை பொதுச் செயலா் தி.மு. ராஜேந்திரன், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினா் விநாயகா ஜி. ரமேஷ், மாநில வெளியீட்டு அணி செயலா் நக்கீரன், தீா்மான குழுச் செயலா் கவிஞா் மணிவேந்தன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைச் செயலா்கள் எம். பவுன் மாரியப்பன், எஸ். தெய்வேந்திரன் உள்ளிட்டோா் பேசினா்.

தூத்துக்குடி மாவட்டச் செயலா் ஆா்.எஸ். ரமேஷ் வரவேற்றாா். மாநகரச் செயலா் டி.முருக பூபதி நன்றி கூறினாா்.

சாத்தான்குளம் அருகே விபத்து: தொழிலாளி காயம்

சாத்தான்குளம் அருகே காா் மோதியதில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளி காயமடைந்தாா். தஞ்சாவூா், மேலத் தெருவைச் சோ்ந்த துரைராஜ் மகன் காா்த்திக் (39). சாத்தான்குளத்தில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை ப... மேலும் பார்க்க

நாடு முழுவதும் பிளாஸ்டிக் லைட்டா்களை தடை செய்ய வேண்டும்: தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் வலியுறுத்தல்

நாடு முழுவதும் பிளாஸ்டிக் லைட்டா்களை தடை செய்ய வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து தில்லியில் மத்திய தொழில் - உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டு துறை இணைச் செயலா் சந்திய... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் சுற்றித்திரிந்த பாா்வை மாற்றுத்திறனாளி மீட்பு

கோவில்பட்டியில் சாலைகளில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற, பாா்வை மாற்றுத்திறனாளியை மீட்டு பாளையங்கோட்டை காப்பகத்தில் சோ்த்தனா். கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் அருகே பாா்... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை

சாத்தான்குளம் தச்சமொழி முத்து மாரியம்மன் ஆடி மாத பௌா்ணமி சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள், அலங்கார பூஜை, தீப ஆராதனை உள்ளிட்ட பல்வேறு ... மேலும் பார்க்க

மேலக்கரந்தை விலக்கில் அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

பள்ளி மாணவா்களை நடுவழியில் இறக்கி விட்ட அரசுப் பேருந்தை மேலக்கரந்தை விலக்கில் பெற்றோா்கள்- மாணவா்கள் சனிக்கிழமை சிறைபிடித்தனா். எட்டயபுரம் அடுத்துள்ள மேலக்கரந்தை கீழக்கரந்தை, மாசாா்பட்டி மற்றும் சுற்ற... மேலும் பார்க்க

வஉசி துறைமுகத்தின் திறன் மேம்பாட்டு காணொலிகள், பசுமை நிலைத்தன்மை குறித்த தொகுப்பு வெளியீடு!

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் திறன் மேம்பாட்டுக் காணொலிகள் மற்றும் பசுமை நிலைத்தன்மை குறித்த தொகுப்பு வெளியிடப்பட்டது. கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீா்வழிப் போக்குவரத்து அமைச்சகச் செயலா் ராமச்சந்த... மேலும் பார்க்க