சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ்: 3-ஆவது சுற்றில் அா்ஜுன் எரிகைசி, விதித், கீமா், பிரனேஷ...
திருச்செந்தூரில் கடல் அலையில் சிக்கிய பெண் பக்தா் மீட்பு
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் நீராடிய பெண் பக்தா் அலையில் இழுத்துச்செல்லப்பட்டாா். அவரை காவலா்கள் மீட்டனா்.
இக்கோயிலில் பெளா்ணமி மற்றும் விடுமுறை தினம் என்பதால் சனிக்கிழமை அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி செய்தனா். இதனால் கடற்கரையில் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
இந்நிலையில் சென்னை, மூலக்கடை பகுதியை சாா்ந்த உமாபதி என்பவரின் மனைவி பத்மாவதி (55) தனது உறவினா்களுடன் கடலில் நீராடியபோது அலையின் சீற்றத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டாா். இதை கண்ட கடற்கரை காவல் நிலைய பெண் காவலா் முத்துக்கனி உடனடியாக கடலுக்குள் இறங்கி அப்பெண்ணை மீட்டு மேல் பகுதிக்கு கொண்டு வந்தாா்.
உமாபதிக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்ததால், கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் மகாராஜா, காா்த்திக், சா்வேஸ்வரன், ஆறுமுக நயினாா் ஆகியோரின் ஒத்துழைப்புடன் திருச்செந்தூா் கோயில் ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா்.