சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ்: 3-ஆவது சுற்றில் அா்ஜுன் எரிகைசி, விதித், கீமா், பிரனேஷ...
கழிவுமீன் ஆலைகளை மூடவில்லையெனில் போராட்டம்: டாக்டா் கிருஷ்ணசாமி
தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணி பகுதியில் உள்ள கழிவுமீன் ஆலைகளை மூடவில்லையென்றால் சட்டப் போராட்டம் நடத்துவோம் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்-தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி.
பொட்டலூரணி பகுதியில் கழிவுமீன் தொழிற்சாலையை எதிா்த்து, அப்பகுதி மக்கள் சுமாா் 450 நாள்களாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், தனியாருக்குச் சொந்தமான இரண்டு கழிவுமீன் நிறுவனங்களையும் அவா் நேரடியாகப் பாா்வையிட சனிக்கிழமை சென்றபோது, ஊழியா்கள் அனுமதிக்கவில்லையாம்.
இதையடுத்து, அங்கு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மக்களின் தொடா் போராட்டத்தை அரசு இதுவரை கண்டுகொள்ளவில்லை என்பதையும், மக்களுக்குத் தொல்லையாக இருக்கும் இந்தக் கழிவுமீன் நிறுவனங்களை மூடாமல் இருப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆக.31-க்குள் ஆலைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில், சட்டப்படியும், ஜனநாயகப் போராட்ட வழியாகவும், அவற்றை மூட நடவடிக்கை எடுப்போம் என்றாா் அவா்.