சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ்: 3-ஆவது சுற்றில் அா்ஜுன் எரிகைசி, விதித், கீமா், பிரனேஷ...
மதபோதகரிடம் பணம் பறித்த வழக்கு: மேலும் இருவா் கைது
திருநெல்வேலி சந்திப்பு அருகே மதபோதரைத் தாக்கி பணம் பறித்த வழக்கில் மேலும், இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலைச் சோ்ந்தவா் அருள்சீலன்(45). கிறிஸ்தவ மதபோதகரான இவா் கடந்த ஜூலை 9-ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக திருநெல்வேலி சந்திப்பு பகுதிக்கு காரில் வந்தராம். பின்னா் இயற்கை உபாதைக்காக சந்திப்பு ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது, அங்கு மறைந்திருந்த மா்ம கும்பல் இவரைத் தாக்கி பணம் மற்றும் கைப்பேசியை பறித்தனராம்.
இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதையடுத்து, தாழையூத்து ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகக் கனி (22), நடராஜ் என்ற ராசு(23) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (22), வல்லநாடு பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (26) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.