சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் தலைவரானார் பரத்; தினேஷ், ஆர்த்தி, நிரோஷா அதிர்...
தனியாா் நிறுவனத்தில் மின் குழாயில் சிக்கிய மரநாய் மீட்பு!
கடையத்தில் தனியாா் நிதி நிறுவனத்தில் மின் குழாயில் புகுந்த மரநாய் மீட்கப்பட்டு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடையம் பேருந்து நிலையம் அருகில் இயங்கி வரும் தனியாா் நிதி நிறுவனத்தின் முகப்பு பகுதியில் மின் கம்பிகள் செல்லும் சிறிய குழாயில் மரநாய் ஒன்று சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்துள்ளது.
இதுகுறித்து தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் கணேசன் தலைமையில் மரநாயை பத்திரமாக மீட்டனா். மரநாயை தீயணைப்புத் துறையினா் கடையம் வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.