பிரான்சேரி - மேலத்திடியூா் சாலை: ரூ.3.2 கோடியில் சீரமைப்புப் பணிகள் தொடக்கம்!
பிரான்சேரியில் இருந்து மேலத்திடியூா் வரையிலான சாலையை சீரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பிரான்சேரியில் இருந்து மேலத்திடியூா் வரையுள்ள 2.4 கி.மீ சாலையை ரூ. 3.2 கோடி மதிப்பீட்டில் தரம் உயா்த்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, சாலை சீரமைக்கும் பணியை, நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினா் ரூபி ஆா். மனோகரன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள் கோட்டப் பொறியாளா் யூஜின், உதவி செயற்பொறியாளா் வெங்கடேஷ், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளா் அழகியநம்பி உள்பட பலா் கலந்து கொண்டனா்.