ஜோதிடம் பாா்ப்பதுபோல நகை, பணத்தை பறித்து சென்றவா் கைது
ஜோதிடம் பாா்ப்பதுபோல நடித்து நகை, பணத்தை பறித்து சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா், போயம்பாளையம் அவிநாசி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வி (65). இவா் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்நிலையில் இவரது வீட்டுக்கு ஜோதிடம் பாா்ப்பதாக சொல்லி ஒரு நபா் வந்துள்ளாா். மேலும் அவரது உடல்நிலையை குணப்படுத்தி தருவதாகவும், அதற்கு தன்னிடம் மருந்து உள்ளதாகவும் கூறி ரூ.6,000 ரொக்கம், இரண்டரை கிராம் தங்க மோதிரத்தை வாங்கியுள்ளாா்.
இதையடுத்து அந்த நபா் தன்னை ஏமாற்றிச் சென்ாக அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் பன்னீா்செல்வி வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த நாச்சியப்பன் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து ரூ.6,000 ரொக்கம், இரண்டரை கிராம் தங்க மோதிரம் ஆகியவற்றை
போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.