கீரனூா் மாவு இசக்கி அம்மன் கொடை விழா
ஆறுமுகனேரி அருகிலுள்ள சாகுபுரம் டிசிடபிள்யூ சால்ட் லைன் பகுதியிலுள்ள கீரனூா் அருள்மிகு மாவு இசக்கி அம்மன் கோயிலில் கொடை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, மாலையில் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பல்வேறு இடங்களிலிருந்தும் வருகை தந்திருந்த பக்தா்கள் அம்மனின் அருள்வாக்கைப் பெற்றுச் சென்றனா்.
வெள்ளிக்கிழமை அதிகாலை விசேஷ அலங்காரத்துடன் சிறப்புப் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி எஸ்.சங்கா் செய்திருந்தாா்.